Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 07, புதன்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் , மதுரங்குளி - பாலசோலை பகுதியில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய கட்டடத்திற்குள் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மதுரங்குளி பாலசோலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், கடந்த டிசம்பர் மாதம் முதல் தனது நண்பர் வசிக்கும் பாலசோலை பகுதியில் உள்ள தோட்டத்தில் நண்பருடன் வசிந்து வந்துள்ளதாகவும், கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நண்பரின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, வியாழக்கிழமை (08) இரவு தோட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக கட்டப்பட்டுள்ள சிறிய கட்டடம் ஒன்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதனை அவதானித்த நண்பரின் மகன், இதுபற்றி தனது தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்னர் சம்பவம் பற்றி மதுரங்குளி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து கள விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.
குறித்த சிறிய கட்டடத்திற்குள் கிடத்த சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கட்டடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததுடன், பொலிஸார் கதவினை உடைத்து சடலத்தை வெளியே எடுத்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.ஷம்சு ராபி சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரணையை நடத்தியதிடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
48 minute ago
51 minute ago