2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

விசேட நடமாடும் சேவை

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முந்தல் பிரதேச செயலகப்பிரிவு, சமூக அபிவிருத்தி பிரிவுடன் இணைந்து,  மங்கள எளிய புபுதுகம சமுர்த்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொற்றா நோய்களுக்கான விசேட நடமாடும் ஆயர்வேத வைத்திய சேவை, நேற்று (21) புபுதுகம பொது மண்டபத்தில் நடைபெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் விஜானி வசந்திகாவின் ஆலோசனையில், மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீலின் வழிகாட்டலில், முந்தல் புபுதுகம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.ஐ. சுரம்யா நிரஞ்சனி தலைமையில்,  இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் நீரிழிவு, கொலஸ்ரோல் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இலவசமாக ஆயர்வேத மருந்துகளும், ஆலோசனைகளும்  வழங்கப்பட்டன.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X