2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரஷ்ய குடும்பத்தை விரட்டியடித்த காட்டுயானை

Freelancer   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனம் ஒன்று காட்டுயானையால் தாக்கப்பட்ட சம்பவம் பொலன்னறுவை மின்னேரியா தேசிய பூங்காவில் பதிவாகியுள்ளது.

8 வயது பிள்ளை மற்றும் 10 மாத  குழந்தையை உள்ளடக்கிய ஒரு ரஷ்ய குடும்பம் காட்டு யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்களை யானை துரத்தியுள்ளது, அவர்கள் ஓடத் தொடங்கி வாகனத்தில் ஏறிய போதும்  யானை வாகனத்தைத் தாக்கி சேதப்படுத்தியது  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்துடன் பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற குடும்பம், திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X