2022 ஜூலை 02, சனிக்கிழமை

கூரை ஓடுகள் தயாரிக்க மண்ணெண்ணெய் கோருகின்றனர்

Princiya Dixci   / 2022 மே 27 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷாஜஹான்

கூரை ஓடுகள்  தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.

மண்ணெண்ணெய் பெறுவதில் உள்ள பிரச்சினை காரணமாக கூரை ஓடுகள்  தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை, அகில இலங்கை கூரை ஓடு தயாரிப்பாளர்  சங்கத்தினர், நீர்கொழும்பு - கொச்சிக்கடை பிரதேசத்தில் இன்று (27) நடத்தினர்.

இதன்போது குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், “ஓடு தயாரிப்பதற்குத் தேவையான மண்ணெண்ணெய் கிடைக்காமை காரணமாக  தொழிற்சாலைகள் கடந்த 3 வார காலமாக மூடப்பட்டுள்ளன.

“எமது சங்கத்தில் 225 தயாரிப்பாளர்கள் உள்ளனர். 4,500 முதல் 5,000 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.

 “ஒரு தொழிற்சாலைக்கு வாரத்துக்கு 50 லீட்டர் மண்ணெண்ணெய் தந்தால் போதுமானது. நாட்டின் அபிவிருத்திக்கும் கட்டுமானப் பணிக்கும் நாம் அளப்பரியது  சேவையை ஆற்றி வருகின்றோம். எனவே, எமது கோரிக்கையை உரியவர்கள் செவிமடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த ஊடக சந்திப்பில் சங்கத்தின் தலைவர் பெப்டிஸ் பெர்ணான்டோ, உப தலைவர் மார்க்கஸ் பீரிஸ் புள்ளே,  செயலாளர் டபிள்யூ.பி.ஜே.ஏ.பெர்ணான்டோ, பணிப்பாளர் ஜெரால்ட் பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .