Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) வீட்டின் கூரையிலிருந்து, மூன்று ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
அரிய வகையான இந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரையிலிருந்தே அந்த ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆந்தை குஞ்சுகளை அவர் வளர்க்கவில்லை.
வீட்டின் கூரையிலிருந்து அந்த ஆந்தை குஞ்சுகள் மூன்றும் கீழே விழுந்துள்ளன. இதுதொடர்பில் புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினரின் கவனத்துக்கு அந்த எம்.பி கொண்டுவந்துள்ளார். அதனையடுத்து, அங்கிருந்து வந்த அதிகாரிகள், அந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் பிடித்துச் சென்றுவிட்டனர்.
Barn Owl எனும் விஞ்ஞானப் பெயரைக் கொண்ட அந்த அரிய வகையான ஆந்தைகளை இலங்கையில் கூடுதலாக காணமுடியாது. எனினும், களப்புகளுக்கு அண்மையில் சிற்சில இடங்களில் காணலாம்.
பிடிக்கப்பட்ட மூன்று ஆந்தை குஞ்சுகளும் மேலதிக பரிசோதனைகளுக்காக கால்நடை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.


9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025