2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (அப்துல்லாஹ்)

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவிலுள்ள ஹதரஸ்வெவ பாதுகாப்பு வனப் பிரதேசத்தில்  புதையல் தோண்டிய நால்வரை எதிர்வரும்  19ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று  புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவிலுள்ள ஹதரஸ்வெவ பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக   புதையல் தோண்டியதான சந்தேகத்தின் பேரில்    நான்கு பேர் நேற்று திங்கட்கிழமை   அதிகாலை  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்களிடமிருந்து  டைனமைட், டைனமைட் நூல், வெடிபொருட்கள் உட்பட புதையல் தோண்ட பயன்படுத்தப்படும்  உபகரணங்களும்  கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .