2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

புதுப்பிக்கத்தக்க வலுப் பயன்பாட்டை ஆரம்பிக்கும் ஹேமாஸ்

S.Sekar   / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான நிலைபேறான வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியினால், புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குழுமத்தின் 2030 ஆம் ஆண்டை நோக்கிய சூழல் நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குழுமத்தின் பெருமளவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் ஹேலீஸ் சோலரின் புதுப்பிக்கத்தக்க வலு உற்பத்திப் பிரிவான ஃபென்டன்ஸ் லிமிடெட்டினால், ஹேமாஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைப் பகுதிகளின் கூரைகளின் மீது சூரியப் படல்களைப் நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், தேசிய மின் வழங்கல் கட்டமைப்பிலிருந்தான மின்பாவனை 25 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனூடாக, சூழலுக்கு ஏற்படும் தாக்கமும் குறைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

வளிமண்டலத்தில் காபன் வெளியீட்டை குறைப்பதற்கு மேலதிகமாகவும், ஓசோன் படலம் பாதிப்படைவதை தணிப்பதில் பங்களிப்பு வழங்கும் வகையிலும், மாற்று வலு மூலங்களை பயன்படுத்துவதை ஆரம்பிக்கும் வகையில், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், நிலக்கரி தட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்க தன்னைத் தயார்ப்படுத்திய வண்ணமுள்ளது.

ஏனைய கூட்டாண்மை நிறுவனங்களையும் புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களை பயன்படுத்த ஊக்குவிக்கும் முன்மாதிரியான நிறுவனமாக திகழ்வதற்கு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக புதிய வியாபார வழமையாக இதனை மாற்றியமைத்து, இலங்கையில் மொத்த சூழல் தாக்கத்தை தணிப்பதற்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.

தனது சூழல்சார் நிகழ்ச்சிநிரலினூடாக, சூழல் பாதுகாப்பு தொடர்பான பங்காண்மைகளினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஹேமாஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், பொறுப்பு வாய்ந்த வகையில் இயற்கை வளங்களை பயன்படுத்துவதை தணிப்பதற்கும், செயற்பாடுகளின் தாக்கத்தை குறைப்பதற்கும், பிளாஸ்ரிக் பயன்பாட்டைக் குறைத்து, சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .