2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

இணையத்தளத்தினூடாக செலான் டிக்கிரி சிறுவர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கலாம்

S.Sekar   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி கணக்கை இணையத்தளத்தினூடாக ஆரம்பிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கியின் இளம் வாடிக்கையாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமளவு பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றை உறுதி செய்யும் அதேநேரம் சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தளவு தொடர்புகளை பேணி இலகுவாக கணக்கை ஆரம்பிக்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கித் தீர்வுகளை வழங்குவதில் செலான் வங்கி முன்னோடியாகத் திகழ்கின்றது. வாடிக்கையாளர்கள் தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக கிளைக்கு விஜயம் செய்யும் தேவையை குறைத்துக் கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல தீர்வுகளில் பிந்திய அங்கமாக ஒன்லைன் கணக்கு ஆரம்பிப்பு அமைந்துள்ளது. தமது பிள்ளைகளுக்கு டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் பெற்றோருக்கு, செலான் வங்கியின் இணையப்பக்கத்தைப் பார்வையிட்டு, புதிய கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் கையொப்பமிட்டு, தாம் விரும்பிய கிளை ஒன்றிலிருந்து தமது சேமிப்புப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் குறைந்த காலத்தையே செலவிட வேண்டியிருக்கும். இது, சிறுவர்களின் சேமிப்புப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு வழிகோலும்.

தொழில்நுட்ப மேம்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வரும் நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பல சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க உதவியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கிச் சேவைகளை ஒப்பற்ற வகையில் அனுபவிக்கக்கூடிய வகையில் பிரத்தியேக டேட்டா சென்ரரை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இலங்கையின் வியாபாரங்களை ஒன்லைன் கொடுப்பனவுகளுடன் இணைத்து வலுவூட்டும் வகையில் PayHere உடன் கைகோர்த்திருந்தது. அண்மையில் வங்கி முன்னெடுத்திருந்த #ResponsibleMe திட்டத்துக்காக பொது மக்களிடமிருந்து பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவும் சூழலில் அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சுய விழிப்புணர்வு மற்றும் தனிநபர் பொறுப்புக்கூறல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியிருந்தது.

செலான் டிக்கிரி கணக்கினூடாக இளம் வாடிக்கையாளர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமளவு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கியியலுக்கு அப்பாலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு செலான் வங்கி தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .