2023 ஜூன் 01, வியாழக்கிழமை

நெருக்கடி காலத்தில் முறைமை மாற்றத்திற்கான நிபந்தனைகள்: நலிந்தவர்களை மறக்காதிருத்தல்

J.A. George   / 2022 டிசெம்பர் 12 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தக் கட்டுரை சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் சார்பாக கியாட்டி விக்ரமநாயக்கவினால் எழுதப்பட்டது. 

2020-2021 காலப்பகுதியில் பெருந்தொற்றும், அதன் காரணமாக இடம்பெற்ற முடக்கங்களும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோசமடைந்து செல்லும் பொருளாதார நெருக்கடியும், பல தசாப்தங்களாக நாட்டில் இருந்த நெருக்கடிகளில் ஒன்றான வாழ்க்கைத் துணையினால் துஷ;பிரயோகத்திற்கு இலக்காகி பாதிக்கப்பட்டவர்கள், பிரதானமாக பெண்கள் நாடு முழுவதிலும் எதிர்கொள்ளும் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் மேலும் மோசமடைய வழிகோலின. பெருந்தொற்றானது வீட்டு வன்முறைச் சம்பவங்களின் முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தன. பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கின்ற நிலையில், அத்தகைய துஷ;பிரயோகச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும். 

இந்த பின்புலத்தில், வீட்டு வன்முறையை எதிர்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் செயற்படவேண்டிய அவசர தேவை உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்படும் வளங்கள் குறைந்தளவில் ஒதுக்கப்படுவதாக சிலர் குறிப்பிடலாம். ஆனாலும், இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பெண்களின் பாதுகாப்பிற்கான முன்னுரிமையை குறைத்து மதிப்பிடப்படக் கூடாது. 

புதிய வளங்களின் ஆகக் குறைந்த கிடைக்கும் தன்மையின் மத்தியில், தற்போதுள்ள முறைமைகள் வினைத்திறன் மிக்கதாக்கப்பட முடியும். வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவுவதில் இது நீண்ட தூரம் உதவி புரியும். முன்னுரிமைகளில் எப்போதும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் முன்னுக்கு கொண்டுவரப்படல் வேண்டும். ஏனெனில், அவர்களுடைய தேவைகளுக்கான அவசரம் இப்போது அதிகரித்து காணப்படுகின்றது.

பிரதானமாக, இதன்போது என்ன செய்யப்படல் வேண்டும் என்பது இரு வகையிலானதாகும். முதலாவது, வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவியானது மேம்படுத்தப்படல் வேண்டும். அடுத்தது, வீட்டு வன்முறையின் மூல காரணிகள் கண்டறியப்பட்டு, அவை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு, வீட்டு வன்முறைச் சம்பவங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டிற்குப் பதிலளிக்கும் போது, விடயத்தின் அவசரத் தன்மையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில நாட்கள் மட்டுமன்றி, ஒரு சில மணித்தியாலங்கள் தாமதித்தாலும் முழுச்செயற்பாடும் வினைத்திறனற்றதாகி விடும். வீட்டு வன்முறை சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளுக்கு முதலில் பதிலளிப்பவர்கள், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ளும் வகையிலும், பாதிக்கப்பட்டவரின் சூழ்நிலைக்கு வெளிப்படுத்த வேண்டிய கூருணர்வு தொடர்பிலும் கற்பிக்கப்படல் வேண்டும். பயிற்சி வழங்குதல் என்பது பொதுவான தீர்வாக சுட்டிக்காட்டப்பட்டாலும், அவ்வப்போதைய செயலமர்வுகளும், கருத்தரங்குகளும் மாத்திரம் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அதில் இருந்து என்ன தேவை என்பது குறித்த ஆழமான புரிந்துணர்வு கொண்டவர்களாக இது தொடர்பில் செயற்படும் அதிகாரிகள் வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் வகிபாகங்களில் நியமிக்கப்படல் வேண்டும்.

பொதுவாக, வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவியல் நீதிமுறையை அணுகுவது மேலும் அச்சம் நிறைந்ததாக உள்ளது. அது மேலும் பல ஆபத்துக்களுடன் வருவதாக இருக்கும். இதனால், குற்றவியல் முறைமையின் செயல்திறனில் நம்பிக்கை இருக்குமாயின், பாதிக்கப்பட்டவர்கள் அதனை நாடுவதற்கு முயற்சிப்பர். குறித்த முறைமையானது அதிகளவு நிர்வாகப் படிநிலைகளை கொண்டிருப்பின், மற்றும் வௌ;வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல வேண்டியிருப்பின் அங்கிருந்து உதவியை பெறுவதில் இருந்து வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கப்படலாம். 

செயல்படாத கட்டமைப்புக்கள், குறிப்பாக உடனடியான உதவி இன்மையின் காரணமாகப் பாதிக்கப்பட்டப் பெண் துஷ;பிரயோகம் செய்தவரிடமே மீண்டும் வீட்டுக்குச் செல்வது, பாதிக்கப்பட்டவருக்கு மேலும் தீங்கு ஏற்பட வழியமைக்கும். இந்தச் செயற்பாட்டை நெறிப்படுத்தலும், சேவைகள் அனைத்தையும் ஒரு நிலைக்கு கொண்டு வருவதும், குறித்த கட்டமைப்பை அணுகுவதற்கு அச்சம் கொண்ட பாதிக்கப்பட்ட ஒருவரை நாடுவதற்கு உதவும்.

வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பல படிநிலைகள் உள்ளன. அவற்றில் பலவற்றிற்கு மறுசீரமைப்பு மாத்திரமே அவசியமாகும். எடுத்துக்காட்டாக, உதவி நாடுவதற்கான உதவிசேவைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக உதவுவதற்கு நீண்ட தூரம் செல்ல முடியும். ஆனால், அவை சில நேரங்களில் பதிலளிக்கப்படாதவையாக இருக்கின்றன. எப்போது தலையீடு செய்ய வேண்டும் மற்றும் உதவ வேண்டும் என்பது தொடர்பில் பொது மக்களுக்கான ஊடகப் பிரச்சாரங்களும் வினைத்திறன் மிக்கதாகும். பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்திருக்கும் போதும், பொதுமக்களால் அங்கீகரிக்கப்படும் போதும் 'உதவிக்கான சைகை' போன்ற கை சைககளும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டு வன்முறையை முளையிலேயே கிள்ளியெறிவதற்கு மற்றும் அது நிகழும் அளவினை குறைப்பதற்கு, கவனம் செலுத்தப்பட வேண்டிய இரண்டு பகுதிகள் உள்ளன. அவையாவன, ஒன்று கல்வி, மற்றும் முரட்டுத்தனமான நடத்தைக்கு வழிகோலிய காரணிகளையும், விரக்திகளையும் அடையாளம் காணல். பால்நிலை அடிப்படையிலான மாறாநிலை கண்ணோட்டங்களை ஒழித்தல் மற்றும் தமது நிலையை வெளிப்படுத்துவதற்கும், தற்காப்பதற்கும் இளம் வயதிலேயே சிறுமியருக்கு அதிகாரமளித்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டதாக கல்வி என்பது இருக்க வேண்டும். 

வீட்டு வன்முறைக்கு வழிகோலும் மாறாநிலை கண்ணோட்டங்கள் மற்றும் பால்நிலை வகிபாகங்கள் என்பது சமூகத்தில் நன்கு வேரூன்றியிருப்பதனால், அதனை மாற்றுவதற்கான முழுமையான மறுசீரமைப்பு முன்னோக்கு அவசியமாகும். பாடசாலைப் பாடவிதானத்தில் ஒரு சில பாடங்கள் மாத்திரம் தேவையான முடிவுகளைப் பெறுவதற்கு போதுமானது அல்ல. இதற்கு தேவையான கற்பித்தல் என்பது வீட்டில், மத நிறுவனங்களில், ஊடகத்தில் இருந்து மற்றும் சிறுவர்கள் பின்பற்றும் பெரியவர்களின் பொதுவான நடத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

முரட்டுத்தனமான நடத்தைக்கான காரணிகளைப் பார்க்கும் போது, களத்தில் உள்ள நிபுணர்கள் இரண்டு பிரதான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர். முதலாவது, நாட்டில் சிறுவர் துஷ;பிரயோகம் மற்றும் உடல்சார் தண்டனைகளின் வீதம் அதிகமாகும். அத்துடன், சிறு வயதில் இருந்து கோபம் அல்லது எரிச்சலை வெளிப்படுத்துவதற்கான சட்டரீதியான வழியாக வன்முறை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மற்றையது, துஷ்பிரயோகம் செய்யும் பெரும்பாலான ஆண்கள் தமது நிதி சூழ்நிலைகள் அல்லது பல்வேறு பழக்கவழக்கங்களால் விரக்திக்குள்ளானவர்களாகும். அத்துடன், தமது நடத்தை தவறானது என அவர்களுக்கு கற்பிக்கப்படுமாயினும், துஷ;பிரயோகச் சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு சூழ்நிலை சவால்மிக்கதாக அமையும். வீட்டு வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளச்சமூக உதவியென்பது முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த ஏனைய குழுக்களும் சக்கரத்தை உடைப்பதற்கு அத்தகைய உதவிகளை வழங்க வேண்டும்.
 
இவற்றை வினைத்திறன் மிக்கதாக ஆக்குவதற்கு பெருமளவு நிதி அவசியமில்லை. இந்த மாற்றங்களைச் செய்வதற்கான அரசியல் ஆர்வம் என்பதே பற்றாக்குறையாக உள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் விசனமடைந்து, 'அரகலய' மூலம் மில்லியன் கணக்கான இலங்கையர்கள் மாற்றத்தை வேண்டி வீதிக்கு இறங்கினர். வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக சமூகத்தில் உள்ள இலகுவில் பாதிக்கப்படக் கூடிய தமக்காக குரலெழுப்ப முடியாதவர்கள் இவற்றில் மறக்கப்படாதிருத்தல் மிகவும் முக்கியமாகும். இதனைச் செய்யும் போது, மாற்றம் என்பது சாத்தியமாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .