Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 ஜூன் 17 , பி.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
’சிலரிடமிருந்து மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது’ என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
கொழும்பு – 9, இல் சில இடங்களிலும், இன்னும் சில இடங்களிலும், பெறப்பட்ட 9 மாதிரிகளுடன் காலி- கராப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பிலும் பெறப்பட்ட மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.
இதன்போது கொழும்பு – 9, அராமயா பகுதியில் பெறப்பட்ட மாதிரிகள் ஐந்தில் டெல்டா ((B.1.617.2/Indian variant)தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கராப்பிட்டிய, மட்டக்களப்பு, வெள்ளவத்தை, கொழும்பு – 8 மற்றும் கொழும்பு – 10 இல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பிரிட்டனில் பரவும் கொரோனா திரிபான அல்ஃபா (B.1.1.7) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .