S.Sekar / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், கொழும்பிலுள்ள தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணக் கிளையில் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியிருந்தது. பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் பல்கலாசார ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநராகத் திகழ்வதையிட்டு நிறுவனம் பெருமை கொள்கின்றது.
நிறுவனத்தின் நிறைவேற்று நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்களின் பிரசன்னத்துடன் இந்த வைபவ நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் பாரம்பரிய அம்சங்கள் பல இந்நிகழ்வில் அடங்கியிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனத்தில் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகியவற்றை ஊக்குவித்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொள்கின்றது. இந்த அம்சத்தை கவனத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு நிகழ்வாக இது அமைந்திருந்தது.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.7 பில்லியனையும், 2022 செப்டெம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
2 hours ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Nov 2025
23 Nov 2025