2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப்பின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு

S.Sekar   / 2023 மார்ச் 17 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. கொழும்பு 3 இல் அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம், ஊழியர்கள் மற்றும் முகவர் விநியோக நாளிகையின் வெற்றியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது பெருமைக்குரிய, ஆலோசகர்களை மையப்படுத்திய வெகுமதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியாக சிறந்த விற்பனை பெறுபேறுகள், ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் நிபுணத்துவ விருத்திக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்த சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் கௌரவிக்கப்படுவதுடன், வெற்றியாளர்களுக்கு பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் சொகுசான மோட்டார் கார்கள், வியாபார அபிவிருத்தி வெகுமதிகள், பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வாழ்க்கைமுறை வெகுமதிகள் வழங்கப்படுகின்றன.

40க்கும் அதிகமான வெற்றியாளர்களின் சிறந்த பெறுபேறுகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், மன நிம்மதியையும் வழங்குவதற்கு ஆலோசகர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது, சாதாரண வெகுமதித் திட்டத்துக்கு அப்பாலானது. எமது ஆலோசகர்களுடன் அவர்களின் சிறந்த செயற்பாட்டுக்காக, ஆழமான, அர்த்தமுள்ள உறவுகளைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு வழிமுறையாக அமைந்துள்ளது. துரிதமாக மாற்றமடையும் வியாபாரக் சூழலினாலும், 2022 ஆம் ஆண்டில் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டிருந்த பல்வேறு சம்பவங்களினாலும் எழுந்திருந்த பல சவால்களுக்கு மத்தியில் எமது ஆலோசகர்கள் நான்காம் காலாண்டில் சிறப்பாக செயலாற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்திருந்தனர். யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் வெகுமதித் திட்டத்தினூடாக, வழமைக்கு அப்பால் சென்று செயலாற்றியிருந்த ஆலோசகர்கள், மீண்டெழுந்திறனை வெளிப்படுத்தி, ஒப்பற்ற வகையில் செயலாற்றியிருந்தமைக்காக கௌரவிப்பை வழங்கியிருந்தோம். புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி, தரவுகளை மையமாகக் கொண்டு செயலாற்றியிருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுத்திருந்தனர். சகல வெற்றியாளர்களுக்கும், அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் மேலும் சிறந்த சாதனைகளைப் புரிவதற்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.” என்றார்.

பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் வெகுமதித் திட்டத்தினூடாக, எமது வெற்றிகரமான செயற்பாட்டுக்கு பின்புலமாக அமைந்திருக்கும் ஊழியர்கள், தொழிற்துறையில் எமது நிறுவனம் சிறந்த சாதனைகளை எய்தக் காரணமாக அமைந்திருப்பவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். அவர்களின் சாதனைகளை கௌரவிப்பதுடன், எமது நிறுவனத்தின் நோக்கமான இலங்கையர்களுக்கு தமது கனவுகளை நனவாக்கிக் கொள்ள அவசியமான நிதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து வலுச்சேர்ப்பது என்பதற்காக தம்மை அர்ப்பணித்துள்ளமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த எமது சகல ஆலோசகர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பின் அடையாளமாகத் திகழ்கின்றமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .