2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அறிவித்தலைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் நடைமுறையில் உள்ள வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியான எண் பெயர்வுத்திறன் (Number portability) செயல்படுத்தலினை இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) வரவேற்கின்றது.  

மொபைல் மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களில் போட்டியிடும் சேவை வழங்குனர்களிடையே மாற்றுவதற்கு உதவும் எண் பெயர்வுத்திறன் (Number portability) என்பது சர்வதேச அளவில் பரவலாக நடைமுறையில் உள்ள ஒரு வாடிக்கையாளர் வசதியாக காணப்படுவதுடன் தாராளமயமாக்கப்பட்ட தொலைத்தொடர்பு சந்தையின் முக்கிய அம்சமாகும்.

எண் பெயர்வுத்திறன் உள்ளிட்ட வாடிக்கையாளர் தேர்வு சிக்கல்களைத் தணிக்க டயலொக் முதன் முதலில் 2008 ஜூலை மாதத்தில் அதற்கான தீர்வுகளை முன்மொழிந்தது. நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர் தேர்வை அதிகரிப்பதன் மூலம் தொழில்துறையின் மேம்பாட்டினை ஒட்டு மொத்தமாக அனைத்து சேவை வழங்குனர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும் நன்மைகளைத் தரும் என்ற முன்னுதாரணம் தொடர்கிறது

15 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை வாடிக்கையாளர்கள், வர்த்தக நாமத்திலும் அதன் சேவைகளிலும் வைத்திருக்கும் நம்பிக்கையால் டயலொக் என்றும் கௌரவப்படுகின்றது. எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி நாங்கள் செயல்படாவிட்டால் நிறுவனத்தின் வெற்றியும் வளர்ச்சியும் சாத்தியமற்றதாகியிருக்கும். 

திறந்த போட்டி மற்றும் வாடிக்கையாளர் தேர்வு ஆகியவையே எங்கள் வெற்றிக்கு மூல காரணமாகும் அதுவே எங்கள்  மரியாதையுமாகும். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மேம்பட்ட வசதிகளின் தொகுப்பை மட்டுமல்லாமல், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாடிக்கையாளர் சுதந்திரத்திற்கும் உதவுகின்றன” என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர் / குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவித்தார்;.

டயலொக், மொபைல் துறையில் 4 வது இடத்தில் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது. இலங்கை நுகர்வோர் 2000 ஆம் ஆண்டில் மொபைல் சந்தையின் உச்சத்திற்கு டயலொக் இனை உயர்த்தினார்கள். அதன் பின்னர் நிறுவனம் மொபைல், நிலையான தொலைபேசி இணைப்பு, அதிவேக பிராட்பேண்ட் மற்றும் தொலைக்காட்சி சேவையில் இலங்கையின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இணைப்பு வழங்குனராக வளர்ந்துள்ளது. 

ஸ்லீம் - நீல்சன் மக்கள் விருதுகளில் இந்நிறுவனம் இலங்கை மக்களால் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனராகவும் மற்றும் இணைய சேவை வழங்குனராகவும் 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வாக்களிக்கப்பட்டது.

சேவைகளின் மலிவு, தரம், தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றிற்காக இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், வலையமைப்புகள்  முழுவதும் மொபைல் மற்றும் நிலையான இலக்கங்களின் பெயர்வுத்திறனை செயல்படுத்துவது இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

"தொழில்துறை தாராளமயமாக்கலுக்காக ஒழுங்குமுறை ஆணைக்குழு மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட படிமுறைகளுக்கு பார்;த்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். மற்றும் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் இலங்கையில் எண் பெயர்வுத்திறன் அமல்படுத்தும் நிகழ்முறை தொடக்கதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஒழுங்குமுறை ஆணைக்குழு இதேபோன்ற ஏனைய வாடிக்கையாளர்களின் தேர்வு சம்பந்தமான விடயங்களுக்கும் விரைவாக செயற்படும் என்று டயலொக் நம்பிக்கையுடன் உள்ளது ”என்று திரு வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தொலைதொடர்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டில் இயக்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த முதலீட்டில் இலங்கையின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடு என்ற பெருமையையும் டயலொக் மற்றும் அதன் முதன்மை பங்குதாரர் ஆசிஆட்டா குழுமமும் பெற்றுக்கொள்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .