2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மாத்தறை மாவட்ட வைத்தியசாலைக்கு PCR இயந்திரம் அன்பளிப்பு

S.Sekar   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாப்பதற்காக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு PCR இயந்திரமொன்றை SLT-MOBITEL அன்பளிப்புச் செய்திருந்தது.

ரூ. 5.7 மில்லியன் பெறுமதி வாய்ந்த இந்த PCR இயந்திரம், SLT-MOBITEL இன் “சம்பந்தியாவே சத்காரய” சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் அங்கமாக அமைந்திருப்பதுடன், தேசத்தின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை மேம்படுத்தி, தேவைகளைக் கொண்ட சமூகத்தாருக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

SLT-MOBITEL இன் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா, மொபிடெல் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி சஷிக செனரத் ஆகியோர் முன்னிலையில் வைத்தியசாலையின் துணை இயக்குநர் மருத்துவர் உபாலி ரத்நாயக்க அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், SLT-MOBITEL பிராந்திய பொது முகாமையாளர், பிராந்திய தலைமை அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முன்னர், கரவனெல்ல மாவட்ட பொது வைத்தியாலை, மாத்தளை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை போன்றவற்றுக்கு PCR இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. “தான பாரமிதா” திட்டத்துக்கு அனைத்து இலங்கையர்களிடமிருந்தும் கிடைத்த ஆதரவுக்கு SLT-MOBITEL நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுப்பதில் சமூகத்தை ஈடுபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X