2021 ஜூலை 28, புதன்கிழமை

பங்குச் சந்தை இயங்கும்

Editorial   / 2021 மே 21 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வழக்கமான வர்த்தகத்தின்படி, கொழும்பு பங்குச் சந்தையில் , காலை 11 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரையிலும் மே மாதம் 24, 25 ஆம் திகதிகளிலும் மற்றும் 28ஆம் திகதியும் வர்த்தகம் இடம்பெறும்.

எவ்வாறாயினும், வெசாக் போயா தினமான மே.26 மற்றும் 27ஆம் திகதியகளில் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்குமென கொழும்பு பங்கு பரிவர்தனை நிலையம் அறிவித்துள்ளது.

பங்குச் சந்தை வழமை போன்று செயற்படும்

2021 மே மாதம் 24, 25 மற்றும் 28 திகதிகளில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை வழமையான வியாபார நேரங்களின்படி வியாபாரம் நடைபெறும் என்பதை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை  (ஊளுநு) உறுதிப்படுத்துகின்றது. இருப்பினும், வெசக் போயாதின விடுமுறை காரணமாக 2021 மே மாதம்  26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் சந்தை மூடப்படும்.

மேலதிக விபரங்கள்...

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள ஒரேயொரு பங்குச் சந்தையை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை  இயக்குவதுடன் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக்கூடிய ஒரு வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனியாகும்.

இந்நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன் இது 15 அங்கத்தவர்களையும் 15 வியாபார அங்கத்தகவர்களையும் உள்ளடக்கிய ஓர் பரஸ்பரமுள்ள பரிமாற்றகமாகும்.

அனைத்து அங்கத்தவர்கள் மற்றும் வியாபார அங்கத்தவர்கள் பங்குத்தரகர்களாகச் செயற்படுவதற்கு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகத் தகவல்களுக்கு http://www.cse.lkபார்க்கவும்.


மேலதிகத் தகவல்களுக்கு:

நிரோஷன் விஜேசுந்தர
தலைவர் - சந்தைப்படுத்தல்

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை
தளம் 04, மேற்கு கோபுரம்
உலக வர்த்தக மையம்
எச்லன் சதுக்கம்
கொழும்பு 01
இலங்கை.

தொலைபேசி            :  10 94 11 2356510
கையடக்கத் தொலைபேசி    : 10 94 777 819999
தொலைநகல்            : 10 94 11 2445279

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .