2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

தொழில் வாண்மையாளர்களுக்கும் சிறுவர்களுக்குமாக புதிய யமஹா கீபோர்ட்கள்

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் வாண்மை யாளர்களுக்கும் ஆரம்பநிலைக் கலைஞர்களுக்கும் என புதிய வகையிலான டிஜிட்டல் கீபோர்ட்களை இலங்கையில் அறிமுகப்படுத்தி உள்ளதாக, யமஹா இசை நிலையம் (யமஹா மியூசிக் சென்டர்) அறிவித்துள்ளது. இத்துறையில் உலகில் முன்னிலை வகிக்கும் நிறுவனத்தின் கீபோர்ட்களே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.  

யமஹாவின் புதிய ‘PSR SX’ உற்பத்தித் தொடரானது ‘PSR S’ தொடரைப் பதிலீடு செய்கிறது. இதன்மூலமாக டிஜிட்டல் வேர்க்ஸ்டேஷன் ஒலி, வடிவமைப்பு, பயனர் அனுபவம் ஆகியவற்றில் தொழில்வாண்மை இசைக்கலைஞர்களுக்குப் புதிய நியமங்களை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புத்தம்புதியதும் குறைந்தளவு விலையைக் கொண்டதுமான PSSF30, ‘Remie’ PSSE30 கீபோர்ட்கள், சிறுவர்களுக்கு இசை மீது காணப்படும் பேரார்வத்தைத் தூண்டுமென யமஹா இசை நிலையம் தெரிவித்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .