2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ சாதனங்களை Brandix கையளிப்பு

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

Brandix, அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலை, மாவனெல்ல பொது வைத்தியசாலை மற்றும் சீதுவ இடைத்தங்கல் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. சமூகத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் இந்த அன்பளிப்பை மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் “மனுசத்கார” எனும் சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் நீடிப்பாக 12 வென்டிலேற்றர்கள் மற்றும் 18 ஒட்சிசன் செறிவூட்டல் அலகுகள் போன்றவற்றை இவ்வாறு அன்பளிப்புச் செய்திருந்தது.

கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த வென்டிலேற்றர்களை கையளிக்கும் ஏற்பாட்டு நடவடிக்கைகளை ரம்புக்கன Brandix Essentials இன் நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர். வைத்தியசாலையின் புதிய 'High Dependency Unit' (HDU) பிரிவுக்கு மொத்தமாக எட்டு அலகுகள் இவ்வாறு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. இதனூடாக கொவிட்-19 நோயாளர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கும் போது தேவைப்படும் ஒட்சிசன் வழங்கலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின் HDU அலகை பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அங்குரார்ப்பணம் செய்திருந்தார். அமைச்சருடன் வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர். மிஹிரி பிரியங்கனி அவர்களும் இணைந்து கொண்டு, இந்த அத்தியாவசிய உதவியை வழங்கியமைக்காக Brandix நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தன.

மாவனெல்ல பொது வைத்தியசாலைக்கு நான்கு வென்டிலேற்றர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. ரம்புக்கன Brandix Essentials நிர்வாகத்தினர் இவற்றை மாவட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர். உதார குணதிலகவிடம் கையளித்தனர். மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கொவிட் நோயாளர்களுக்கு உதவும் வகையில் இந்த சாதனங்கள் அமைந்திருக்கும்.

சீதுவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்துக்கு 18 ஒட்சிசன் செறிவூட்டல் அலகுகளையும் நிறுவனம் அன்பளிப்புச் செய்திருந்தது. Brandix வலையமைப்பின் முழுநேர தொழிற்சாலையாகத் திகழ்ந்து பின்னர் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்ட இந்த வளாகத்தை, ஆண்டின் முற்பகுதியில் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையில் அன்பளிப்புச் செய்திருந்தது. இதனை சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இயக்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .