2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

ஜனவரியில் FACETS Sri Lanka கண்காட்சி

S.Sekar   / 2022 நவம்பர் 25 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

FACETS Sri Lanka கண்காட்சி. இரு வருடகால இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை, கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி பற்றி விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரத்தினக்கல், தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் (NGJA) தவிசாளர் விராஜ் டி சில்வா, ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர் சுரேஷ் டி மெல், FACETS Sri Lanka வின் தவிசாளர் அல்தாவ் இக்பால், இலங்கை இரத்தினக்கல் ஆபரண சங்கத்தின் (SLGJA) தவிசாளர் அஜ்வாத் டீன் ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன்போது. இலங்கைக்கு உரித்தான Ceylon Sapphire இரத்தினக் கற்களுக்கு கண்காட்சியில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுத்து, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பாதையில் FACETS Sri Lanka வை செலுத்துவதற்காக உலகெங்கிலும் இலங்கையின் இரத்தினக்கற்களை பிரபல்யப்படுத்துவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்ட வழிவகுக்கும் விதத்தில் இலங்கையின் இரத்தினக்கற்கள் துறையை மேம்படுத்தி, 2023ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் தொலைநோக்கு இலக்கைக் கொண்டுள்ளது.

சர்வதேச வர்ண இரத்தினக்கற்கள் சங்கத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றும் இக்பால் கருத்து வெளியிடுகையில், 'Ceylon Sapphire இன் பிரத்தியேமான அழகும், மதிப்பும் 2,500 வருடகாலமாக நன்கறியப்பட்டுள்ளதுடன், இவை உலகின் மிகவும் முக்கியமான இரத்தினக்கற்களின் வரிசையில் தம்மை ஸ்திரமாக பொருத்திக் கொண்டுள்ளன,' என்றார்.

SLGJA யின் தவிசாளர் டீன் கருத்து வெளியிடுகையில், FACETS Sri Lanka ஆனது எப்போதும் துறைசார்ந்த முக்கியமான விடயங்களை ஓரிடத்திற்குள் கொண்டு வந்த பிரத்தியேக கண்காட்சியாகுமெனக் குறிப்பிட்டார். 'இந்தக் கண்காட்சியின் சிறப்பு அமர்வானது இலங்கையின் இரத்தினக்கற்களையும், ஆபரணங்களையும் வெறும் கற்களுக்கு அப்பால் கொண்டு சென்று, இலங்கையை உலகின் சிறப்பான தேசமாக உலக வெளியில் கொண்டு செல்கிறது. பண்டைய காலந்தொட்டு இரத்தினதுவீபம் என்றழைக்கப்படும் சிறுதீவில் உள்ள இரத்தினக்கற்கள் புதையல்களை நாம் காட்சிப்படுத்துகிறோம். இது உலகின் எப்பாகத்திலும், எந்த ஆபரணத்திற்கும் விருப்பத்துடன் நாடப்படும் தெரிவாக இலங்கையின் இரத்தினக்கற்கள் மாறுவதை உறுதி செய்யும் முயற்சியின் சிறு ஆரம்பமாகும்.' என்றார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) என்பது சுரங்க அகழ்வு முதற்கொண்டு தயாரிப்பு ஈராக மொத்த மற்றும் சில்லறை விற்பனை வரையலான சகல உப-துறைகளினது நலன்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பிரதிபலிக்கும் தனியார்த்துறை அமைப்பாகும். இந்த அமைப்பானது, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் கரம் கோர்த்து FACETS Sri Lanka கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X