2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

முதல் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தி உயர்வு

S.Sekar   / 2021 ஜூலை 12 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 4.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது என அரசாங்க தொகைமதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 1.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

விவசாயத்துறை 6.1 சதவீதத்தினாலும், தொழிற்துறை 5.5 சதவீதத்தாலும், சேவைகள் துறை 3.0 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்திருந்தது.

2020 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் கொவிட்-19 இரண்டாம் அலைத் தாக்கம் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பொருளாதாரம் பெருமளவி பாதிப்படைந்திருந்தது. ஆனாலும், சுற்றுலாத் துறை மற்றும் களியாட்டம் தவிர்ந்த ஏனைய பல வர்த்தகச் செயற்பாடுகள் படிப்படியாக மீளமைக்கப்பட்டிருந்தன.

பணவீக்கத்துடனான மொத்தத் தேசிய உற்பத்தி 8.6 சதவீதத்தால் அதிகரித்து 4173 பில்லியன் ரூபாய்களாக பதிவாகியிருந்தது.

விவசாயத்துறை 6.5 சதவீத மறைப் பெறுமதி என்பதிலிருந்து 6.1 வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் தேயிலை உற்பத்தி 37.9 சதவீதம், தானியங்கள் 34.8 சதவீதம், நன்னீர் மீன்பிடி 27 சதவீதம், இறப்பர் 16 சதவீதம், மரக்கறி 14.5 சதவீதம், தேங்காய் 6.4 சதவீதம் மற்றும் மீன்பிடி 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

தொழிற்துறையைப் பொறுத்தமட்டில் 6.8 சதவீதமும், இரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் 20 சதவீதம், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் 12.9 சதவீதம், ஆடை உற்பத்தி 8.4 சதவீதம், உணவு மற்றும் புகையிலை 6.0 சதவீதம் மற்றும் இயந்திர சாதனங்கள் 8.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

நிர்மாணத்துறை 4.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

சேவைகள், தொலைத்தொடர்பாடல் ஆகிய துறைகள் 19.1 சதவீதம், தகவல் தொழில்நுட்பம் 14.9 சதவீதம், நிதியியல் 13.1 சதவீதம் மற்றும் காப்புறுதி 11.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

மொத்த மற்றும் விற்பனைத் துறை 3.7 சதவீதம் மற்றும் போக்குவரத்து 1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன.

தங்குமிடங்கள் மற்றும் உணவு சேவைகள் போன்றன முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31.9 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.

நாட்டின் கடன் கட்டமைப்பு என்பது உறுதியற்ற நாணயக் கொள்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. இதில் பாரியளவில் பணம் அச்சிடல் மற்றும் பொருளாதார கட்டுப்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தமை பங்களிப்பு வழங்கியிருந்தன.

இறக்குமதி கட்டுப்பாடுகள், விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் போன்றன இதில் தாக்கம் செய்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .