2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

முதல் 4 மாதங்களில் 19 மில். அமெ.டொ. வருமானம்

S.Sekar   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் நான்கு மாதங்களில் நாட்டுக்கு 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் பதிவாகியிருந்த 682 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் ஒப்பிடுகையில், இந்தப் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியை பதிவு செய்திருந்தாலும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்தப் பெறுமதி கடந்த ஆண்டின் பின்பகுதியில் பெருமளவு வீழ்ச்சியடைந்தது.

ஏப்ரல் மாதத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சமூகமளித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4168 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சமூமளித்திருந்தனர். இந்தப் பெறுமதி மார்ச் மாதத்தில் 4581 ஆக பதிவாகியிருந்தது. 2021ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 13797 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். 2020ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கை 507,311 ஆக காணப்பட்டது. 2021 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் இந்தியா, சீனா மற்றும் கசகஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களினூடாக ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாத் துறையின் வருமானம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .