2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

உயர் வழமையான புதிய வியாபார வளர்ச்சியை யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு

S.Sekar   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியை வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்திருந்தது. வழமையான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சியை 65% ஆக பதிவு செய்திருந்ததுடன், தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வியாபாரச் சூழலிலும் இலங்கையின் சிறந்த 5 ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர் மத்தியில் தம்மைப் பதிவு செய்திருந்தது.

2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் நிறுவனம் GWP பெறுமதியாக 6.5 பில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 29% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்த நிதிப் பெறுபேறுகள் என்பது உறுதியான செயற்திறன் மற்றும் தந்திரோபாயமான வழிநடத்தல் போன்றவற்றினூடாக வழிநடத்தப்பட்டிருந்ததுடன், துறையின் சிறந்த ஐந்து காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாகத் திகழ்வதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகளினூடாக, தொடுகைஅற்ற வாடிக்கையாளர் உதவிச் சேவைகளான 24/7 மும்மொழிகளிலும் இயங்கும் அழைப்பு நிலையம், ஒன்லைன் chat bot, WhatsApp, Clicklife சுய சேவை app மற்றும் Clicklife டிஜிட்டல் தீர்வு போன்றன உள்ளடங்கியிருந்தன. கொவிட்-19 உடன் தொடர்புடைய உரிமை கோரல்கள் அடங்கலாக ரூ. 1.7 பில்லியனுக்கு அதிக பெறுமதியான உரிமை கோரல்களை நாம் வழங்கியிருந்தோம். கொவிட் விதிமுறைகளின் பிரகாரம் ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் செயலாற்றியிருந்ததுடன், எமது பங்காளர்களுக்கு அர்ப்பணிப்பை உறுதி செய்வதற்காக எமது உத்வேகமான அணியின் செயற்பாட்டை நாம் முன்னெடுத்திருந்தோம்.” என்றார்.

நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நிறுவனம் GWP இல் 5 ஆண்டு கால திரண்ட வருடாந்த வளர்ச்சி வீதமாக (CAGR) 13% ஐ பதிவு செய்திருந்தது. மேலும், நிறுவனத்தின் வரிக்கு பிந்திய இலாபம் (PAT) முதல் அரையாண்டு காலப்பகுதியில் 19% இனால் அதிகரித்து ரூ. 402 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ. 462 மில்லியனாக பதிவாகியிருந்தது. நிறுவனம் ஆரோக்கியமான மூலதன போதுமை விகிதமான 300% ஐ பேணியிருந்தது. இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 120% என்பதை விட பெருமளவு அதிகமானதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .