2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி தமது பங்காண்மையை புதுப்பிப்பு

S.Sekar   / 2022 ஜூலை 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியன தமது 7 வருட கால பங்காண்மையை நீடித்துள்ளன.

இந்த உடன்படிக்கையில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் மற்றும் யூனியன் வங்கி பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர். இந்த நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே, யூனியன் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் சாயா ஜயவர்தன, யூனியன் வங்கியின் நுகர்வோர் தீர்வுகள் மற்றும் மாற்று நாளிகைகள் உப தலைவர் மனிஷா பெர்னான்டோ மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் நாளிகைத் தலைமை அதிகாரி சாமர நதிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியன கடந்த காலங்களில் பரஸ்பர அனுகூலமளிக்கும் பங்காண்மையை பேணியிருந்ததுடன், பாங்கசூரன்ஸ் வாடிக்கையாளர்களினூடாக பயன்களை பெற்றிருந்தன. 2016 ஆம் ஆண்டில் இந்தப் பங்காண்மை ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், 2018 ஆம் ஆண்டு முதல் பிரத்தியேகமானதாக அமைந்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மையை புதுப்பித்துள்ளமையானது இரு நிறுவனங்களுக்கும் வெற்றியளிக்கும் நகர்வாக அமைந்துள்ளது. வங்கியின் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆயுள் காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க எமக்கு ஏதுவாக அமைந்திருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய ஒப்பற்ற அனுபவத்தை வழங்கக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டினுள் பாங்கசூரன்ஸ் சேவைகளை மேலும் விஸ்தரிப்பு செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவதுடன், பாதுகாப்புக்கு காணப்படும் இடைவெளியை குறைப்பதாக அமைந்திருக்கும். சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் சௌகரியம் ஆகியன பாங்கசூரன்ஸின் உள்ளக அம்சங்களாக அமைந்துள்ளன.” என்றார்.

இந்தப் பங்காண்மை நீடிப்பு தொடர்பில் யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், பாங்கசூரன்ஸ் என்பது வேகமாக வளர்ந்து வருவதுடன், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்து, மேம்படுத்தப்பட்ட நிதியியல் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும், நீண்ட கால பாதுகாப்பை இந்த நெருக்கடியான காலப்பகுதியில் வழங்குவதாக அமைந்திருக்கும் என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் வங்கியுடனான பங்காண்மை தொடர்ந்து உறுதியாக வளர்ச்சியடையும். இந்தக் கைகோர்ப்பினூடாக நாட்டின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக திகழச் செய்துள்ளது. வங்கியியல் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு எமது புத்தாக்கமான தீர்வுகளுடன் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிபுணத்துவம் மற்றும் சிறந்த நிதியியல் ஆலோசனைகளை வழங்குவோம்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் – யூனியன் வங்கி பங்காண்மையினூடாக இரு நிறுவனங்களின் இலாகாப் பெறுமதி மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. ஒரே கூரையின் கீழ் பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை அணுகுவதற்கு வங்கியின் வாடிக்கையாளர் இருப்புக்கு வலுச் சேர்த்துள்ளதுடன், ஒரே கூரையின் கீழ் தமது வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .