2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

‘14 ஆம் திகதிக்கு பின்னர் பின்பற்ற வேண்டியவை பின்னர் அறிவிக்கப்படும்’

Editorial   / 2021 ஜூன் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில், மே.25ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக, அமுப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே.21 ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மே.25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது. அதன்பின்னர், மே.31ஆம் திகதியும் ஜூன்.4 ஆம் திகதியும் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொதுமக்கள் நடந்துகொண்ட விதத்தை அடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல், நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், 14ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய பின் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என கொவிட்-19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .