2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

Cool Planet க்கு SLT-MOBITEL Fibre வசதி

S.Sekar   / 2023 மார்ச் 13 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, ஆடைகள் விற்பனைத் தொடரான Cool Planet (Pvt) Ltd, உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. நுகேகொடயில் நிறுவப்பட்டுள்ள Cool Planet இன் புதிய கட்டடத் தொகுதிக்கு SLT-MOBITEL Fibre இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

இந்த உடன்படிக்கையில் SLT இன் நுகர்வோர் வியாபார ஆதரவு பொது முகாமையாளர் புஷ்பகுமார சமரசிங்க மற்றும் Cool Planet (Pvt) Ltd. இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிஸ்வி தாஹா ஆகியோர் இரு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் முன்னிலையில் கைச்சாத்திட்டனர்.

Cool Planet (Pvt) Ltd. இன் நுகேகொடயில் நிறுவப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதி, 51,000 சதுர அடிப்பரப்பில் அமைந்துள்ளதுடன், 3 மாடிகளைக் கொண்டுள்ளது. இதில் பரந்தளவு நவநாகரீக ஆடைத் தெரிவுகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள், காகிதாதிகள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் போன்றன அடங்கியுள்ளன. Cool Planet இன் ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தகநாமமிடல் மற்றும் புத்தாக்கமான தந்திரோபாயங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட அலங்காரம் மற்றும் சொகுசான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கின் அங்கமாக இந்தக் கட்டடத் தொகுதி அமைந்துள்ளது.

SLT-MOBITEL இனால் கட்டடத் தொகுதியினுள் Fibre தொழில்நுட்பம் வழங்கப்படும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் கட்டடத் தீர்வுகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். அதிவேக இணைப்பைக் கொண்ட SLT-MOBITEL Fibre இனால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சொப்பிங் அனுபவம் சேர்க்கப்படும். விற்பனைகள், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலும், பாதுகாப்பு உள்ளம்சங்களைக் கொண்டதாகவும் இருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .