2023 ஜூன் 07, புதன்கிழமை

Dialog Star Points மூலம் ‘Little Hearts’ திட்டத்துக்கு நன்கொடை

S.Sekar   / 2023 மார்ச் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள குழந்தைகளின் வாழ்க்கையில் நீடித்த நல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 450,000க்கும் அதிகளவான டயலொக் வாடிக்கையாளர்கள் ஒன்றிணைந்து 2022 ஆம் ஆண்டில் ‘Little Hearts’ (லிட்டில் ஹார்ட்ஸ்) முன்முயற்சிக்கு Star Points (ஸ்டார் பொயின்ட்ஸ்) மூலம் ரூ.27 மில்லியன் நன்கொடையை வழங்கியிருந்ததாக டயலொக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக, 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை Star Points மூலம் இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்தமாக ரூ.122 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘Little Hearts’ முன்முயற்சியானது இலங்கை குழந்தை நல மருத்துவர்கள் கல்லூரியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு திட்டமாகும். இதயநோய்கள் மற்றும் தீவிர நோய்களின் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களின் நலனை மேற்கொண்டு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நான்கு இருதய சிகிச்சை கூடங்களை கொண்டதான 12 அடுக்கு மாடி வளாக அமைப்பை முன்னெடுத்து மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நிதியுதவி அளிக்கப்படுகின்றது. ஒரு வடிகுழாய் ஆய்வகம், 100 க்கும் மேற்பட்ட இதய கோளாறுகள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை படுக்கைகள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அலகு, மற்றும் மேம்படுத்தப்பட்ட இதய ஆய்வு மற்றும் பயிற்சி வசதிகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக இந்த அடுக்குமாடி அமைந்திருக்கும். இக்கட்டட கட்டுமானப் பணிகளுக்கு ரூ.4 பில்லியன் ரூபாய்க்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அதற்கு கைகொடுக்கும் உன்னத நோக்கில் ஒவ்வொரு வருடமும் டயலொக் இதற்கான நன்கொடை வழங்கல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அதற்கமையவே டயலொக் வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பமான தொண்டு நிறுவனத்திற்கு தமது Star Points களை நன்கொடையாக வழங்கும் பரோபகார முயற்சியின் மூலம் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்குமான ஏற்பாட்டை டயலொக் செயற்படுத்தி வருகின்றது.

இதன்போது உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி லசந்த தெவெரப்பெரும "எங்கள் Dialog Star Points வாடிக்கையாளர்களின் பெருந்தன்மையையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். Star Points நன்கொடைகள் பலரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவ மனையில் நான்கு இருதய சிகிச்சை கூடங்களை கொண்டதான 12 அடுக்கு மாடி வளாகத்தின் கட்டுமானத்தின் முன்னெடுப்பிற்கு அளிக்கப்பட்டு வருகின்ற நன்கொடைகளின் எண்ணிக்கை சமூகத்தின் சக்திக்கு ஒரு சான்றாகும். இதய கோளாறுகளை எதிர்த்துப் போராடும் சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் சிறந்த மருத்துவ பராமரிப்புக்கான உரிமைக்கு தகுதியானவர்களாக எங்கள் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு எடுத்துக் காட்டுகின்றது. இதற்காக நமது வாடிக்கையாளர்களுக்கும் இத்தகைய உன்னத பணியில் பங்கெடுக்க நமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம்" என்றார்.

'Little Hearts' திட்ட இணைப்பாளர் மருத்துவர் துமிந்த சமரசிங்க குறிப்பிடுகையில், "டயலொக் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் அவர்களின் சிறப்பான சேவைக்காக நன்றி தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன். அவ்வாறே, இந்த 'Star Points' நன்கொடை மூலம் லிட்டில் ஹார்ட்ஸ்களை காப்பாற்றுவதற்காக தாராளமாக தமது நட்சத்திரப் புள்ளிகளை நன்கொடையளித்து உதவ முன்வந்துள்ள அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நான் நன்றி கூற வேண்டும். இதேவேளை, முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நாங்கள் உறுதி செய்கிறோம். நமது அனைத்து திட்டங்களையும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க முடியும் என்று நம்புகிறோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .