2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

JAT Holdings அறிமுகப்படுத்தியுள்ள “WHITE by JAT”

S.Sekar   / 2021 மே 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

JAT Holdings தனது உற்பத்தி வரிசையில் WHITE by JAT தெரிவை அறிமுகம் செய்துள்ளது.

WHITE by JAT பிரிலியன்ட் வைட் எமல்ஷன் (brilliant white emulsion) வண்ணப்பூச்சு உற்பத்தி வரிசை ‘உலகை வெள்ளை நிறத்தால் வண்ணமயமாக்குதல்’ என்ற தொலைநோக்கு அபிலாஷையை பின்பற்றியுள்ளதுடன், இது வெண்மையின் அழகைக் காண உலகிற்கு இடமளிக்கிறது. WHITE by JAT ஆனது தூய்மை, சுத்தம் மற்றும் நேர்த்தியை பிரதிபலிக்கின்றது. இவை அனைத்தும் நவீன நுகர்வோர் தங்கள் வீடுகளிலும் பணிச் சூழலிலும் உள்ளிணைத்துக்கொள்ள விரும்பும் பண்புகள்.

சந்தையில் தனது போட்டியாளர்களின் உற்பத்தி வழங்கல்களுடன் ஒப்பிடுகையில் மகத்தான முடிவு வேலைப்பாடு, திரைப்படம் போன்ற கண்கவர் மென்மை, விசாலமான இடப்பரப்பிற்கு பூசக்கூடியதாக இருத்தல், சிறப்பான ஒளிபுகாத் தன்மை மற்றும் வெண்மை ஆகியவற்றை வழங்குகின்ற அதிசிறந்த எமல்ஷன் வண்ணப்பூச்சை வழங்குவதில் JAT Holdings மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இந்த பிரிலியன்ட் வைட் எமல்ஷன் உற்பத்தி வரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எமல்ஷனின் மேற்குறிப்பிட்ட தலைசிறந்த பண்புகளுக்கு அப்பால், அனைவருக்கும் கட்டுபடியாகும் வகையில் இந்த உற்பத்தி வரிசையானது கணிசமான அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், இந்த உற்பத்தியானது முக்கியமாக புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு அல்லது கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க விரும்பும் அல்லது தற்போது இருக்கும் சுவர்களின் நிறத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் அல்லது நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளது. தங்கள் நிர்மாணச் செயற்திட்டங்களுக்கு பூசுவதற்கு உயர்தரம் கொண்ட பிரிலியன்ட் வைட் வண்ணப்பூச்சை எதிர்பார்த்துள்ள கட்டுமான நிறுவனங்கள் நியாயமான விலை கொண்ட இந்த உற்பத்தியின் நன்மைகளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த உற்பத்தியை அறிமுகப்படுத்துவதற்குப் புறம்பாக, WHITE by JAT உற்பத்தியை கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை உறுதி செய்வதற்காக www.whitebyjat.com மூலமாக இணையத்திலும் இதனைக் கொள்வனவு செய்ய முடியும். இது எளிய மற்றும் இலகுவாக கண்டறிந்து கொள்ளக்கூடிய வலைத்தளம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அளவை, சிரமங்களின்றி கொள்வனவுக்கோரலை முன்வைக்க இடமளிக்கிறது. எவ்விதமான விநியோகக் கட்டணமுமின்றி நாடு முழுவதும் வீட்டுக்கான நேரடி விநியோக சேவையை வழங்குகின்றது. WHITE by JAT ஆனது கொள்வனவுக்கோரல் விடுக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரைச் சென்றடைவதை உறுதி செய்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .