S.Sekar / 2021 மே 31 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, இலங்கையிலுள்ள வலுவான வியாபார நிறுவனங்களில் ஒன்றாக தனது ஸ்தானத்தை மேலும் உறுதி செய்துள்ளது. இலங்கையின் முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் LMD 100 தரப்படுத்தலில், கடந்த ஆண்டில் காணப்பட்ட 23ஆம் இடத்திலிருந்து, நடப்பு ஆண்டில் 20 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2019/2020 காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமைக்காக இந்த உயர் தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டின் LMD இன் சிறந்த 100 நிறுவனங்கள் தரப்படுத்தல் என்பது இலங்கையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கூர்மையான மதிப்பாய்வுகளின் பிரகாரம் தரப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக நிறுவனங்களின் வருடாந்த நிதி அறிக்கைகள் மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட தினசரி அறிக்கைகளில் அடங்கியிருந்த தகவல்களை கூர்மையாக மதிப்பாய்வு செய்திருந்ததன் பிரகாரம் இந்த தரப்படுத்தல் தயாரிக்கப்பட்டிருந்தது. சொத்துககள், பங்குதாரர்களின் நிதிகள் மற்றும் சந்தை மூலதனவாக்கம் ஆகியவற்றின் பிரகாரம் நிறுவனங்களின் தரப்படுத்தலை LMD 100 மேற்கொண்டிருந்தது.
செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான கபில ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், வங்கியியல் துறை பெருமளவு சவால்களுக்கு முகங் கொடுப்பதுடன், துரிதமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கங்கள் போன்றவற்றுக்கும் முகங் கொடுக்கின்றது. நன்மதிப்பைப் பெற்ற LMD 100 தரப்படுத்தலில் முன்னேற்றத்தைப் பதிவு செய்வது என்பது சவால்கள் மிக்க காலப்பகுதிகளில் எமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான நினைவூட்டலாக அமைந்துள்ளது. தொற்றுப் பரவலின் பின்னரான புதிய வழமையின் கீழ் முன்னரை விட உறுதியாக நாம் வளர்ச்சியடையும் நிலையில், வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே எமது பிரதான நோக்கம் அமைந்திருக்கும். உறுதியற்ற சூழ்நிலைகளிலும், எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்கும் நாம் எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நிறுவனங்கள் எதிர்நோக்கியிருந்த சவால்கள் நிறைந்த ஏற்றத் தாழ்வுகளுடனான சூழலில், வங்கி தனது தொடர்ச்சியான முயற்சி மற்றும் உறுதித் தன்மையினூடாக தனது பிரசன்னத்தை உறுதி செய்துள்ளது. செலான் வங்கியின் உறுதியான நிதி வினைத்திறன் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான ஆற்றல் என்பன பிந்திய LMD 100 தரப்படுத்தல்களில் உயர் ஸ்தானத்தை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தன.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025