2023 ஜூன் 07, புதன்கிழமை

SLT பயிற்சி நிலையம் மற்றும் SLIM உடன்படிக்கை கைச்சாத்து

S.Sekar   / 2023 பெப்ரவரி 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் பயிற்சி நிலையம் (SLTTC), இலங்கையில் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடன் (SLIM) முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக தேசத்தின் விற்பனைச் செயலணியினரை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

உடன்படிக்கையின் பிரகாரம், SLTTC இல் பிரேரிக்கப்பட்ட விற்பனை முகாமைத்துவத்துக்கான தேசிய டிப்ளோமா (NDSM) கற்கையை SLIM வழங்கும். ஒன்பது மாத கால கற்கையில் டிஜிட்டல் மற்றும் சமூக விற்பனை, தந்திரோபாய விற்பனை முகாமைத்துவம் மற்றும் விற்பனை எதிர்வுகூரல், திட்டமிடல் மற்றும் கட்டணமிடல், மக்களை நிர்வாகித்தல் மற்றும் செயற்திறன் போன்றன அடங்கியிருக்கும். இதனூடாக விற்பனை செயலணிக்கு அவசியமான திறன்கள் கட்டியெழுப்பப்படும்.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க மற்றும் SLIM கல்வியகத்தின் தலைவர் ஜனக சில்வா ஆகியோரிடையே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. திறன் விருத்தி பொது முகாமையாளர் ஜனக சில்வா, SLT-MOBITEL திறன் விருத்தி நிலையத்தின் பிரதி பொது முகாமையாளர் ஆசிரி இந்திக, SLIM இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று பணிப்பாளருமான சனத் சேனநாயக்க, வியாபார அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளர் மிஹிரினி பொன்சேகா, கூட்டாண்மை விற்பனைகள் முகாமையாளர் அசங்க செனெவிரட்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயிற்சி நடவடிக்கைகளினூடாக நிறுவனத்தின் மனித வளங்களை கட்டியெழுப்பும் நோக்கில் SLTTC நிறுவப்பட்டிருந்தது. ஆனாலும், தற்போது இந்நிலையத்தின் கற்கைகளுக்கு காணப்படும் வரவேற்பின் காரணமாக, நிலையத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட தகைமைகள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன பரந்தளவு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் காணப்படும் நிபுணர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில், இந்த நிலையத்தினால் பெறுமதி வாய்ந்த அறிவு வழங்கப்படுவதுடன், இதனூடாக வழங்கப்படும் பரந்தளவு பிரயோக அனுபவத்தினூடாக இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பல வருட காலமாக கட்டியெழுப்புவதில் பங்களிப்பு வழங்குகின்றதையிட்டு பெருமை கொள்கின்றது. புகழ்பெற்ற தகைமை அமைப்புகளுடனான கைகோர்ப்பினூடாக, SLTTC இனால் City & Guilds (UK)மற்றும் Pearson (UK), நுட்பவியலாளர்கள் சான்றிதழ்கள் மற்றும் HND டிப்ளோமாக்கள் போன்றன இலத்திரனியல், மின்னியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறைகளில் வழங்கப்படுகின்றன.

University of Hertfordshire இனால் SLTTC ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனூடாக, மூன்றாண்டு காலப்பகுதிக்கான Bachelor of Engineering (BEng) பட்டக் கல்வி வழங்கப்படுகின்றது. உலகில் காணப்படும் 1000 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக University of Hertfordshire அமைந்துள்ளதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் BEng (Hons) Engineering பட்டக் கற்கைகளை முன்னெடுப்பதற்கான ஏக உரிமையை SLTTC கொண்டுள்ளது.

Outside Plant network, Data communication, IT, Management போன்ற பிரிவுகளில் பல மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சார் பயிற்சிகளை SLTTC வழங்குகின்றது. மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற கல்வியகம் எனும் வகையில், இந்த நிலையத்தினால் உயர் தரம் வாய்ந்த பயிற்சி நெறிகள் வழங்கப்படுவதுடன், இவற்றினூடாக, பிரயோகசார் அறிவு வழங்கப்படுவது மாத்திரமன்றி, அவசியமான நடைமுறைசெயற்பாட்டு திறன்களும் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .