2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL Enterprise Data One இடமிருந்து MSMEகளுக்கு தீர்வு

S.Sekar   / 2023 மார்ச் 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு (MSMEs), தமது சகல கிளைகளையும் இணைத்துக் கொள்ளக்கூடிய தங்கியிருக்கக்கூடிய ஒற்றை புரோட்பான்ட் இணைப்புத் தீர்வுகளை வழங்கும் வகையில், SLT-MOBITEL Enterprise தனது புதிய ‘Data One’ தீர்வை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

Data One இனால், MSME வியாபாரங்களின் சகல கிளைகளையும் உள்வாங்கி ஒற்றை புரோட்பான்ட் இணைப்புப் பக்கேஜ் வழங்கப்படுகின்றது.

Data One இன் உள்ளம்சங்களில், anytime data வழங்கல்கள், data பாவனையை கண்காணிப்பதற்கு நிறுவனத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதி, data bucket ஐ நிர்வகிப்பது மற்றும் ஒவ்வொரு கிளைகளுக்கும் ஆணுகுவதற்கு data ஒதுக்கீட்டை நிர்வகிக்கும் வசதியையும் வழங்குகின்றது. வியாபாரத்தின் data கேள்விகளின் அடிப்படையில், கோரிக்கையின் பிரகாரம் extra GB கிடைப்பதுடன், மேலதிக data க்கு நியமக் கட்டண அறவீடு மேற்கொள்ளப்படுகின்றது. SLT-MOBITEL இனால் நியமக் கட்டண அறவீடுட்டின் பிரகாரம் Static IP வழங்கப்படுகின்றது.

சிறிய அல்லது பாரியளவு MSMEகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், SLT-MOBITEL இனால், அதன் Data One பாவனையாளர்களுக்கு கவர்ச்சிகரமான பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. New-born, Start-up, Grow, Explore, Energized, Redefine, Astonish, மற்றும் Enterprise ஆகிய பிரிவுகள் இதில் அடங்கியுள்ளன. இந்த பக்கேஜ்களுக்கான Anytime GB அளவு 100-5000 GB வரையில் காணப்படுகின்றது. ஆகக்குறைந்தது ரூ. 4,500 முதல் ஆகக்கூடியது ரூ. 165,000 வரையில் அமைந்துள்ளது. கிளைகளின் எண்ணிக்கையும் ஆகக்குறைந்தது 4 முதல் 40 வரை காணப்படுகின்றது. கிளை ஒன்றுக்கான Data One மாதாந்த பக்கேஜ் பெறுமதி ரூ. 100 ஆக மாத்திரம் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .