2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

Unimo உடன் செலான் வங்கி கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஜூன் 07 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புகளைக் கொண்டுள்ள DFSK, 7 இருக்கைகளைக் கொண்ட SUV, Glory 330 MPV மற்றும் Z100 சிறிய கார்களைக் கொள்வனவு செய்வதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான லீசிங் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு யுனைட்டட் மோட்டர்ஸ் லங்கா பிஎல்சியின் துணை நிறுவனமான Unimo என்டர்பிரைசஸ் லிமிடெட் உடன் செலான் வங்கி பிஎல்சி கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு விசேட வட்டி வீதக் குறைப்புடன் இலவச பதிவு வசதியையும் வழங்கி நெகிழ்ச்சியான முறையில் மீளச் செலுத்தும் திட்டங்களுடன் லீசிங் வசதிகளை செலான் வங்கி வழங்குகின்றது. தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச கடன் அட்டை மற்றும் விலைக்கழிவுகளுடன் கூடிய காப்புறுதி வசதிகளை தெரிவுக்குரிய காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வசதியையும் வழங்குகின்றது. அதுபோன்று, செலான் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு இந்த பங்காண்மையினூடாக, Unimo இனால் இலவச வாகன பதிவு வசதிகள், ஊழியர் கட்டணமற்ற சேவைகள் மற்றும் விலைக்கழிவுகள் போன்றவற்றை DFSK 580 மற்றும்      Glory 330 ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.

செலான் லீசிங் வசதியுடன், வணிக மற்றும் போக்குவரத்து பிரிவுகளைச் சேர்ந்த சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை (SME) நிறுவனங்கள் தமக்கு விருப்பமான வாகனங்களை சௌகரியமான மீளக் கொடுப்பனவு திட்டங்களில் கொள்வனவு செய்ய முடியும். தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, மாதாந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பொருத்தமான லீசிங் வசதிகளையும் வழங்க வங்கி முன்வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .