2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

இடிபாடுகளில் சிக்கி மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமிகள்!

J.A. George   / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில்  சிக்கிய சிறுமிகள் மூன்று நாட்களுக்குப் பின்  மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, கரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பேரிடியாக இஸ்மீர் நகரில் அக்டோபர் 30ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது. 

கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அலைகள் எழுந்தன. அத்துடன், நிலப்பரப்பில் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இதுவரை 80க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

962 பேர் காயமடைந்துள்ளனர். பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதில் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. 

இன்னும் பலர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் இடிபாடுகளில் சிக்கிய சிறுமிகள் இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .