J.A. George / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மனைவி ஒரு ஆண்டிற்கு மேலாக பொதுவெளியில் காணப்படாததால், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
உலகில் மர்மங்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் உள்ளது. இங்கு என்ன நடக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது, அதை உறுதியாகவும் சொல்ல முடியாது.
அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்னோ அல்லது அந்நாட்டின் ஊடகங்களில் வந்தால் மட்டுமே அதை நாம் உறுதிபடுத்த முடியும். அந்தளவிற்கு வடகொரியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா ஜனாதிபதியின் மனைவியான Ri Sol-ju(32) கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் திகதி கிம் ஜாங் உன்னுடன், தலைநகர் பியோங்யாங்கில் இருக்கும் சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின் அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை. கிம் ஜாங் உன் மற்றும் Ri Sol-ju கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
4 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
2 hours ago