Ilango Bharathy / 2021 ஜூலை 07 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தான் வளர்த்து வந்த செல்லப் பூனையொன்றை 10 முறைகள் கத்தியால் குத்தி, குளிரூட்டியின் உறை பகுதியில் (Freezer) வைத்துள்ள சம்பவம் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சுசான்னே பெனட் (Suzanne Bennett) என்னும் 48 வயது பெண்ணே இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார். இச் சம்பவத்தின் போது அவர் மூன்று போத்தல்கள் வைன் அருந்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பூனை கத்தும் சத்தம் கேட்டு அயலவர்கள் அதுபற்றி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த பூனையைக் காப்பாற்றியுள்ளதோடு அப்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

இதன் போது பூனையின் கழுத்திலும் காலிலும் கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட காயங்கள் இருந்ததாகவும், எனினும் அப்பூனை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையின்போது அப்பெண் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளதால் அவர் சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.
எனினும் குறித்த பெண்ணுக்கு 18 மாத கால சமூக ஒழுங்கை பின்பற்றவும் பூனையின் மருத்துவ செலவுகளை ஏற்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago