2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பற்றி எரிந்தது ‘சமோசா’ ஒருவர் துடிதுடித்து மரணம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் நகரில் அமர்கந்தக் என்ற பகுதியில் பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர் தனது 2 நண்பர்களுடன் சமோசா உட்கொண்டுள்ளார்.

இதன்போது சமோசாவின் விலை உயர்ந்து விட்டதாகவும், அதனால் இதுவரை 7.50 ரூபாய்க்கு விற்ற ஒரு சமோசா தற்போது 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும்  கடைக்காரர் கஞ்சன் சாகு கூறியுள்ளார். 

இதனை ஏற்க மறுத்து ஜெய்ஸ்வால் வாக்குவாதம் செய்துள்ளார்.  இதுபற்றி கடைக்காரர் பொலிஸ் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து பொலிஸார் ஜெய்ஸ்வாலிடம் விசாரித்துச் சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து உள்ளார்.  இதில், பலத்த காயமடைந்த அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .