Editorial / 2021 ஜூன் 11 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் என்றாலே சமையலில் கைதேர்ந்தவர்கள், இன்னும் சில பெண்கள் அசைவம் சமைப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரேஸிலைச் சேர்ந்த பெண்ணொருவர், வித்தியாசமாக சமைத்துள்ளார்.
அதாவது, தன்னுடைய கணவனின் மர்ம உறுப்பை வெட்டி சமைத்துள்ளார். அதன்பின்னர், கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டயேன் கிறிஸ்டினா என்னும் 33 வயது பெண்ணே, கடந்த 7ஆம் திகதி இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்.
பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்றபோது, மேற்படி நபரின் உடல் நிர்வாண நிலையிலும் சிதைக்கப்பட்ட நிலையிலும் வீட்டுக்குள் கிடந்துள்ளது. கொல்லப்பட்டவரின் பெயர் அன்ரு என்று தெரியவந்தது.
பொலிஸார் இதுபற்றித் தெரிவிக்கையில், அந்தப் பெண் கணவனின் மர்ம உறுப்பை வெட்டி, சோய் எண்ணெயில் பொரித்துள்ளார். இந்தச் சம்பவம் அதிகாலை நான்கு மணியளவில் கணவன்- மனைவி இருவரும் பிரிவதைப் பற்றி வாக்குவாதப்பட்டு, அதன் பின்னர் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சமையலறை கத்தியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தப் பெண் கொலை மற்றும் பிணத்தை சிதைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தம்பதியருக்கு 8 வயது மகனும் 5 வயது மகளும் இருப்பதும் தெரியவருகிறது.

8 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
54 minute ago
1 hours ago