2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

FIFA உலக கோப்பைக்காக வீடு வாங்கிய ரசிகர்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 23 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA  உலகக்கோப்பை காற்பந்துத்  தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில்  கோலாகலமாக ஆரம்பமானது.

உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ள இத் தொடரானது, டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இக்காற்பந்துப் போட்டித் தொடரை ஒன்றாக இணைந்து பார்க்க கேரளாவில் உள்ள காற்பந்து ரசிகர்கள் 17 பேர் சேர்ந்து  இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய்க்கு தனி வீடு ஒன்றை வாங்கியுள்ள  சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் முண்டக்காமுகல் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தீவிர காற்பந்து  ரசிகர்களே இவ்வாறு  FIFA உலகக் கோப்பையை கொண்டாடுவதற்காகவே  வீடு வாங்கியுள்ளனர்.

மேலும் இவ்வீட்டின் சுவரில் ஆர்ஜென்டினாவின் காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்த்துக்களின்  காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ  ஆகியோரின் உருவப்படங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர்.

அத்துடன் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் போர்த்துக்கள் ஆகிய நாடுகளின் வண்ணங்களில் தங்களது வீட்டிற்கு  வர்ணம் பூசியுள்ளனர்.

இது தவிர, காற்பந்து  வீரர்கள் பலரின் கட்டவுட்டுகளையும்  அவர்கள் அவ்வீட்டில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .