2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

இலுப்பைக்கடவையில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  இலுப்பைக்கடவை பகுதியில், மக்கள் குடியிருப்பில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை பகுதியில், மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நண்டு, அட்டை, மீன் உள்ளடங்களாக பல பண்ணைகள், உரிய பாதுகாப்பு இன்றியும் பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றன.

இது தொடர்பாக, அப்பகுதி மகக்ள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில், மன்னார் மாவட்டப் பிராந்திய ஊடகவியாலாளர் ஒருவர், நேற்று (19), அப்பகுதிக்கு நேரடியாகச் பார்வையிட்டு, செய்தி சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில், இலுப்பைக் கடவை மீனவ சங்கத் தலைவரும்; உரிய பாதுகாப்பின்றி காணப்பட்ட பண்ணையின் உரிமையாளர் ஒருவரும் செயற்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களுடன் சிலர் இணைந்து ஊடகவியலாளரை  அச்சுறுத்தியதுடன், கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை அழிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பண்ணையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், இச்செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை தொடர்ந்து, அவ்விளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .