Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களின் வலைகளை, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கள்ளப்பாட்டு பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், நேற்று (11), கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட வேளை, மாவட்ட கடற்றொழிலாளர்களின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள், உள்ளூர் மீனவர்களின் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்ததுடன், கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்தின.
இது குறித்து மாவட்ட கடற்றொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .