2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

குமுழமுனைக்கு பஸ் சேவைகளை அதிகரிக்கவும்

Freelancer   / 2023 ஜனவரி 26 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, குமுழமுனை கிராமத்துக்கு பஸ் சேவைகளை அதிகரிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளருக்கு குமுழமுனை கிராம அபிவிருத்திச் சங்கம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.  

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமுழமுனை கிராமத்துக்கான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் சேவை இரண்டும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ஒரு வருடத்துக்கு மேலாக, இவ்விரண்டு சேவையும் இடம் பெறுவதில்லை. இதனால் எமது மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் பயணத்தைத் தொடர்கின்றார்கள். 

அது மட்டுமல்லாது ஆறுமுகத்தான்குளம், முறிப்பு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றார்கள். மாஞ்சோலையில் உள்ள முல்லைத்தீவு பொது  வைத்தியசாலை, வங்கி, அரச அலுவலகங்கள் என எல்லாச் சேவைகளையும் பெறுவதற்கும், குமுழமுனை  கிராமத்தில் இருந்து முல்லைத்தீவு, தண்ணிரூற்று போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால், எமது கிராமத்துக்கான பஸ் சேவைகளை அதிகரிக்குமாறு வேண்டுகின்றோம் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .