Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தின் முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் அம்பர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1.85 கிலோ கிராம் நிறையுடைய அம்பர் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர், முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (24) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபட்டார்.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒரு இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்ததுடன் அம்பரை மேலதிக பகுப்பாய்வுக்காக நாரா நிறுவனத்துக்கு அனுப்புவதற்கும் நீதிமன்று உத்தரவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
3 hours ago