2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2021 நவம்பர் 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான  விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து , இன்று (28), முல்லைத்தீவு நகரப் பகுதியில்,  பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள்  ஆகியோர்  ஒன்றிணைந்து ,இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன்சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், உப தவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், தி.இரவீந்திரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந்த், முத்துச்சாமி முகுந்தகஜன், வலிவடக்கு பிரதேசசபை உறுப்பின் கஜீவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன், தமிழரசுக்கட்சி செயற்பாட்டாளர் அன்ரனி ஜெஜநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, ஊடகவியலாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X