Editorial / 2022 ஜனவரி 04 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது
இன்று (04) வரையிலும் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கு, நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த நிதர்சனா, அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில், கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து 13 ஆம் திகதியன்று புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போய்விட்டாரென அவரது குடும்ப உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 15 ம் திகதி முறைப்பாடு பதிவு செய்திருந்தனர் .
ஆனால், இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது
ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது அக்காவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரி ஆகியோரை வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர் .
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட குழு நடாத்திய விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் உள்ளது.
இந்நிலையில், கருவைக் கலைக்குமு் போது, சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்திருந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் சிறுமியின் தாய், தந்தை, சகோதரி, சகோதரியியின் கணவன்,மைத்துனன் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டு இன்று (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குய்ப்ப்பிடத்தக்கது
12 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
1 hours ago