2023 ஜூன் 07, புதன்கிழமை

வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றமையால், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக மடு பிரதேச செயலாளர் கீ.பீட் நிஜாகரன் தெரிவித்தார்.

கிறிசலஸ் அமைப்பின் நிதி உதவியுடன், மன்னார் மாவட்ட குடி சார் அமைப்பின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சமூக பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளை தணிக்கும் நோக்கில், ஒரு வலுவான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் பெண்களை வலுவூட்டுதலும், அதனூடாக சமூகத்தை அபிவிருத்தி செய்தலும்” எனும் தொனிப்பொருளில்' மன்னார் மாவட்ட பரிந்துரை முன்னெடுப்பு செயல்திட்டம், மடு பிரதேச செயலகத்தில் நேற்று (22) மாலை நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய அவர், “பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் சம்மந்தமாக கிறிசலஸ்  நிறுவனத்தினர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில், மடு பிரதேச செயலகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

“மடு பிரதேசத்தில் சமூகம் சார்பாக பெண்கள் , சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் சிறிதளவில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

“குறித்த வன்முறைகள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உத்தியோகத்தர்கள் திணைக்களங்களுடன் இணைந்து பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் குறித்து பணியாற்றி வருகின்றனர்.

“எனவே, இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக சமூகத்தில் சட்டத்தை அமுல்படுத்தும் வேளையில் மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

“நாங்கள் இப்பிரதேசத்தில் பெண்கள் , சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு பிணக்குகளை கையாண்டு வருகிறோம். இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை கொண்டு செல்லப்படுவது அவசியம்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .