2022 ஜூலை 04, திங்கட்கிழமை

மன்னார் மக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக நகர பகுதியில் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பகல் நேரங்களில்  வழங்கப்படும் நீர் வழங்கலின் அழுத்தம் குறைவாக காணப்படும்.

இதனால் பகல் நேரங்களில் எமது பாவனையாளர்கள் துரித கதியில் நீரை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இதற்கான காரணமாக உள்ளது.

எனவே முருங்கனில் இருந்து மன்னாரிற்கு நீரை விரைவு படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனால், மன்னார் நகர பகுதிகளில் நீர் இணைப்பு பெற்றுள்ள பாவனையாளர்கள் நாளாந்தம் இரவு நேரங்களில்   தமது வீடுகளில் உள்ள நீர் தாங்கிகள் அல்லது கொள்கலன்களில் நீரினை சேமித்து வைத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

என மன்னார் நகர மக்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .