Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 19 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களிடம் சில்மிசம் செய்த சாமியார் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்,
திருகோணமலை பகுதியினை சேர்ந்த பூசாரி ஒருவர் பில்லி சூனியம் நீக்குவதாக முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்தும் வவுனியாவில் இருந்து வந்த இரண்டு யுவதிகளுக்கு ஜீவநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சூனியம் நீக்குவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்று சூனியம் நீக்கியுள்ளார்.
இதில் வவுனியாவினை சேர்ந்த யுவதி வீடு சென்றுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த யுவதி தனக்கு நடந்தவற்றை உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது யுவதி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் உடனடியாக பொலிஸாரிக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து யுவதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பூசாரியினை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்த சம்வம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட 20 வயதுடைய யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையின் போது யுவதிக்கு மது அருந்த கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பூசைக்காக சாரயம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளமையும் இவ்வாறு பல சம்வங்கள் பதிவாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. R
18 minute ago
25 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
3 hours ago
5 hours ago