2023 ஜூன் 01, வியாழக்கிழமை

பளையில் கண்ணிவெடி

Freelancer   / 2023 மார்ச் 12 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

UPDATE - 

பளை வீமன்காமம் பகுதியில் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது மிதிவெடி வெடிபொருள் என கூறப்பட்ட போதிலும், அதை பரிசோதனை செய்த விசேட அதிரடிப்படையினர் மிதிவெடி அல்ல எனவும் கேஸ் உள்ள பொருள் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

செந்தூரன் பிரதீபன்

பளை வீமன்காமம் பகுதியில் நிலக்கண்ணிவெடி ஒன்று அவதானிக்கப்பட்டமை தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் வெடிபொருள் ஒன்று இருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் குறித்த பிரதேசம் இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டது.

இதேவேளை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று நிலக் கண்ணிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .