2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

வடமாகாண பிரதம செயலாளருக்கு வரவேற்பு

Niroshini   / 2021 ஜூலை 21 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டச் செயலாளராக கடமையாற்றி வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள சமன் பந்துலசேனவுக்கு, வவுனியாவில், இன்று (21) வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்நிகழ்வில், மேலதிக மாவட்டச் செயலாளர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், சமூக ஆர்வலர்கள், பொதுஅமைப்புகள், அரச உயர் அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, கருத்துரைத்த வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்டச் செயலாளராக  கடமையாற்றிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனக்கு பக்கபலமாக செயற்ப்பட்ட அரச அதிகாரிகள், அரசியலவாதிகள், பொதுஅமைப்புக்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

வடக்கின்  பிரதம செயலாளராக கடமை ஏற்கவுள்ள நிலையில், வடமாகாண மக்களுக்கு இன, மத பேதமற்று தனது சேவையை, பணிகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .