2022 ஜனவரி 22, சனிக்கிழமை

’வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளதல்ல’

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது எனவும் கூறினார்.

வவுனியாவில், நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் செல்கின்ற அல்லது பார்க்கின்ற இடங்களில் விவசாயிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர்களது வட்டார உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தான் அந்த போராட்டங்களில் பங்கேற்றிருந்தனர் எனவும் கூறினார்.

சேதன பசளை தொடர்பாக சில முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும், அரசாங்கம் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்த அவர், விரைவில் விவசாயிகளுக்கு சாதகமான பதில் வந்தடையும் எனவும் கூறினார்.

'அத்துடன், கடந்த காலங்களிலும் மீனவர்களுக்கிடையே பிரச்சினை நீடித்து கொண்டுதான் இருந்தது. ஆனால் எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்றதில் இருந்து இந்த பிரச்சினை கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவாகவே இருக்கிறது.

'ஆனால் சுதந்திரமாக எந்தவித அழுத்தமும் இல்லாமல் செயற்படுகின்ற ஒரு அமைச்சர். இன்றும் கூட அமைச்சர் எங்களுடைய பிரதிநிதிகள் உட்பட அனைவரிடமும் மிகவும் அவசரமாக செய்திகளை வழங்கி மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

'மக்களுக்கான பிரச்சினையை முற்றுமுழுதாக கண்காணித்து தீர்த்துக்கொண்டு வருகின்ற ஒருவரை, கூட்டமைப்பினர் போல் கையாலாகாதவர்கள் துதி பாடுவதையிட்டு நான் பெரிதாக அலட்டிக் கொள்ள போவதல்ல' என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X