2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

’சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்கவும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாத்தால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாததால் விபத்துக்குள்ளாவோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் கடந்த ஒரு மாதகாலமாக இந்த நிலை காணப்படுகின்றன என்றார்.

இந்த வைத்தியசாலையை நம்பியே பல நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் எனத் தெரிவித்த அவர், வைத்தியர்கள் பற்றாக்குறை, நிதந்தர பணிப்பாளர் இல்லாத பற்றாக்குறை என்று காலம் காலமாக தொடர்ந்து வருவதாகவும் கூறினார்.

எனவே, சுகாதார துறையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் நிர்வாக ரீதியில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருக்கின்ற உண்மைத்தன்மையை சரியான முறையில் கவனத்தில் கொண்டு, சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .