2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

’பாலம் புனரமைக்கப்பட்டால் வெளிச்சம் ஏற்படுத்தப்படும்’

Niroshini   / 2021 ஜூலை 21 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படாமல், மின்சாரம் மூலமோ அல்லது சூரிய மின்கலம் மூலமோ வெளிச்சம் ஏற்படுத்துவது சாத்தியமானது அல்ல என, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வட்டுவாகல் பாலத்தில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள போதிலும், கடந்த பத்து ஆண்டுகளாக பாலம் புனரமைப்பதற்கான திட்டமிடல்கள், முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும்  ஆனால் புனரமைப்பு முயற்சிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், பிரதேச சபை வட்டுவாகல் பாலத்துக்கு வெளிச்சம் பொருத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்க முடியாது உள்ளதாகத் தெரிவித்த அவர்,   காரணம், வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்பட்டாலே வெளிச்சம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமென்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .